நா.யோகேந்திரநாதன். யாழ்ப்பாணம்: தமிழ் லீடர், வில்லு மதவடி, நீர்வேலி தெற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ்).
x, 376 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42746-2-4.
1950-1960 காலப்பகுதியில் எமது மண்ணில் நிலவிய சமூக பண்பாட்டு வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். உலகம் முதலாளித்துவமயப்பட்ட போதிலும், நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையான சாதியமைப்பு எமது மண்ணில் நீண்டகாலம் நிலைத்து நின்ற காரணத்தை அவை ஆராய்ந்து பார்க்கத் தவறிவிட்டன. அதுதான் சாதிகளுக்கிடையே ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் ஒரு விதமான உறவுமுறை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைத் தங்கள் உரிமையென இறுகப் பற்றிப் பிடிக்கும் அளவிற்கு சாதியமைப்பின் இழைகள் மரபுசார் பழக்க வழக்கங்களால் பின்னப்பட்டிருந்தன. அவை தொடர்பான ஆசிரியரின் அனுபவங்களும் அந்த அனுபவங்கள் புடம்போடப்படும்போது கிடைத்த பெறுபேறுகளுமே இந்த நாவலாகும்.