13773 இந்தியாவை நேசிக்கும் வரை (ஒரு நாவல்).

அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: Green Breeze International (Pvt) Ltd, பூங்காற்று பதிப்பகம், 59, 1/1, ஹைலெவல் வீதி, கிரில்லப்பனை, 1வது பதிப்பு, ஜுன் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xii, 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-0700-03-5.

ராஜீல் காந்தியின் படுகொலைக்குக் காரணமான இலங்கைத் தமிழர்களின் மீதான பழிவாங்கலை, இந்திய காங்கிரஸ் குடும்பமான ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் 2009இல் நடந்தேறிய இலங்கைத் தமிழரின் படுகொலைகளின்போது, இலங்கை அரசுக்குக் கைகொடுத்ததன் மூலம் மேற்கொண்டு திருப்தி கண்டனர்; என்ற வரலாற்றுப் பின்னணியில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. சமூக நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், தனிநபர் வரலாறு, இனங்களின் வரலாறு என எழுத்து துறையில் பல பரிமாணங்களில் எழுதி கொண்டிருக்கும் இந்நூலாசிரியர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1978ஆம் ஆண்டு  சேகுவேரா என்ற நூலை வெளியிட்டதனூடாக இவர் எழுத்துலகிற்கு அறிமுகமானார். 25இற்கும் அதிகமான படைப்புகளை இவர் நூலுருவில் வெளியிட்டுள்ளார்.  இவரது படைப்புகளில் அஷ்ரபின் அந்த ஏழு நாட்கள் என்ற நூல் இலங்கை அரசியல் வரலாற்றின் சில பக்கங்களை எமக்கு அறியத்தந்தது. போரும் மனிதனும், மரணம் ஒரு முடிவல்ல, மக்களும் மற்றவர்களும், ஒரு மாமன்னரின் பொற்காலம், எனது தேசம் எனது மக்கள், சின்னச் சின்ன எண்ணங்கள், இந்தியாவை நேசிக்கும்வரை ஆகிய ஏழு நூல்களை ஒரே நேரத்தில் வெளியிட்டுவைத்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54049).

ஏனைய பதிவுகள்