இரா.சடகோபன். பத்தரமுல்ல: இரா.சடகோபன், 17B, ரிச்சார்ட் டீ சொய்சா ஊடகவியலாளர் வீடமைப்புத் திட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
406 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-42706-2-6.
விறுவிறுப்பான வரலாற்று நாவலாக எழுதப்பட்டுள்ள இப்படைப்பினை வாசிக்கும்போது ஒரு துப்பறியும் நாவலை வாசிக்கும் மன உந்துதலை வாசகர் பெறுவர். கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னனான ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் வரலாறு சுவைபட இந்நூலுக்குள் பின்னப்பட்டுள்ளது. தொழில்முறையில் சட்டத்தரணியாகவும் கவிஞராகவும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் சஞ்சிகை ஆசிரியராகவும் அறியப்பட்டவர் இரா.சடகோபன். சுகவாழ்வு சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், விஜய் இதழின் ஸ்தாபக ஆசிரியராகவும் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62995).