மொழிவாணன். கொழும்பு 13: நீரஜா பப்ளிக்கேஷன்ஸ், 248/83, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, ஜுலை 1989. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(8), 135 பக்கம், விலை: ரூபா 4.50, அளவு: 18×12 சமீ.
ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன் கொழும்புவாழ் கீழ் மத்தியதர வர்க்க மக்களின் (குறிப்பாக வாலிபப் பருவத்தினரின்) வாழ்க்கைக் கோலங்களை சித்திரித்து இந்நாவலை எழுதியுள்ளார். மோதலில் ஆரம்பித்து காதலில் சங்கமித்து கண்ணீரில் அஸ்தமிக்கும் ஒரு காதல் காவியம் இது. முன்னர் தினகரன் வார மஞ்சரியில் தொடர்கதையாக வெளிவந்தது. நீரஜா பப்ளிக்கேஷன்ஸ் வெளியீட்டுத் தொடர் இலக்கம் 6. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31794).