மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், வேப்பங்குளம், 1வது பதிப்பு, நவம்பர் 2016. (வவுனியா: வாணி கொம்பியூட்டர் பிரின்டிங் சென்டர்).
viii, 9-228 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-41614-8-1.
2015ஆம் ஆண்டு கலாசாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கையெழுத்துப் பிரதிப் போட்டியில் பரிசுபெற்ற நாவல். நாவலின் கதாநாயகன் ஒரு எழுத்தாளன். பருவ வயதில் தடுக்கி விழுந்த அவன், பிற்காலத்தில் அடைந்த துன்பங்களை விபரிப்பதாக அமைகின்றது இந்நாவல். வளர்ந்து தன் வாழ்வைத் தொடர முற்படுகையில் அவனது பருவ வயதுக் கோளாறுகள் எவ்வாறு அவனைப் பாதிக்கின்றன என்பதையும் தன் வாழ்வை அவன் போராட்டத்தின்பின் எவ்வாறு அர்த்தமுள்ளதாக்கிக் கொள்கின்றான் என்பதையும் சுவையாகக் கதையை நகர்த்திச் செல்கையில் ஆசிரியர் கூறுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62309).