நஸ்பியா அஜீத். யாழ்ப்பாணம்: நஸ்பியா அஜீத், ஆசிரியை, காதி அபூபக்கர் வீதி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: அன்றா பிறின்ரேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி).
xii, 89 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×15 சமீ.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் சமூக விஞ்ஞான நெறியில் பயிற்றப்பட்ட ஆசிரியரான நஸ்பியா எழுதியுள்ள குறுநாவல் இது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் போர்க்கால அரசியல் நெருக்கீடுகளின்போது புத்தளத்தில் வசித்துப் பின் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறியவர். போரின் பல்வேறு வகையான நெருக்கீட்டு நினைவுகளையும் அதனால் ஏற்படும் தாக்கங்களையும் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நாவல், இத்தாக்கங்கள் குடும்ப, தனிமனித வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய உளவியல்ரீதியான தாக்கங்களையும் சிறந்தமுறையில் வெளிப்படுத்துகின்றது. கண்ணீர்ப் பூக்கள், பெண்ணே, ஒளி தந்த மெழுகுதிரி, தாயும் குழந்தையும், கண்ணீர்ப் பூக்களும் கரைசேரலாம் ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58930).