இணுவில் ஆர்.எம்.கிருபாகரன். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).
xxiv, 160 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 18×12 சமீ.
இலங்கைத்தீவில் இருக்கும் நாக நாட்டையும் கல்யாணிபுரத்தையும் மையமாகக் கொண்டு எதிரிகளின் சூழ்ச்சியை அவர்கள் முறியடித்த விதத்தையும் மறைந்திருந்த அரசியல் உண்மைகள் வெளிப்பட வேண்டிய சூழலையும் இந்நாவல் சொல்கிறது. நாகநாட்டு படைத்தளபதி செம்பருத்தியன் அரசுமுறைப் பயணமாகக் கல்யாணிபுரத்திற்கு வருகிறான். அங்கு இளவரசி பூவழகியிடம் மயங்கினாலும் அரச பரம்பரையில் சேராத தன்னை மன்னன் ஏற்றுக்கொள்வாரோ என்ற தயக்கத்திலே நாட்களைக் கடத்துகிறான். கல்யாணிபுரத்து அரசனின் வாரிசு தான் செம்பருத்தியன் என்ற உண்மை வெளிவரும் போது அனைத்தும் சுமூகச் சூழலை எட்டி விடுகிறது. எதிரிகளிடம் நாட்டை விட்டு நாகநாட்டின் காட்டில் தஞ்சமடைந்த செம்பருத்தியனின் பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு அவன் தவசியாரிடம் தஞ்சமடைந்த உண்மை வெளிவருகிறது. இரு நாடுகளையும் சுற்றி இருக்கும் சிற்றரசுகள் கையாளும் தந்திரத்தை இவர்களின் வாள் வீச்சில் முறியடித்த பகுதி விவரிக்கிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63494).