13788 காணா இன்பம் கனிந்ததேனோ?

ஆ.மு.சி.வேலழகன் (இயற்பெயர்: சி.வேல்முருகு). மட்டக்களப்பு: ஆ.மு.சி.வேலழகன், கலைமகள் வீதி, தாமரைக்குளம், தாழங்குடா-2, 1வது பதிப்பு, 2010. (சென்னை 5: ஸ்ரீ இராகவேந்திரா பிரிண்டர்ஸ், 15, தானப்ப தெரு, திருவல்லிக்கேணி).

143 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-955-8715-62-8.

மட்டக்களப்புப் பகுதி வாழ்க்கையை இரத்தமும் சதையுமாகப் பதிவுசெய்த படைப்பிலக்கியமாக இந்நாவல் விளங்குகின்றது. மட்டக்களப்பின் தனித்துவமான பேச்சுவழக்கு, அதன் மெருகு குன்றாத வகையில் மிக இலாவகமாகக் கையாளப்பட்டிருப்பது இந்நாவலின் மற்றுமோர் சிறப்பம்சமாகும். கள்ளம் கபடமற்ற உழைப்பைத் தவிர வேறொன்றையும் அறியாத பாத்திர வார்ப்பாக ‘வல்லி’ பாத்திரப் படைப்பு நமது கண்முன் விரிந்து செல்கின்றது. மனைவி இறந்தபின்னும் தன் வாரிசை வளர்த்து ஆளாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் வல்லி. காலந்தோறும் பெண்கள் பல்வேறு வடிவங்களில் வஞ்சிக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் நிகழ்ந்து வருவதை கந்தவனம் பூசாரியார் மூலம் ஆசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். சாதியக் கொடுமைக்கு ஒரே தீர்வு கலப்புத் திருமணம் என்பதனை மாரிக்கும் சிவகுருவுக்கும் நடைபெறும் திருமண நிகழ்ச்சியோடு ஆசிரியர் சொல்லி முடிக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51438).

ஏனைய பதிவுகள்