மணிவாணன் (இயற்பெயர்: வி.க.இரத்தினசபாபதி).கொழும்பு 6: மாணிக்கப் பிரசுரம், 29, கல்யாணி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1976. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(7), 58 பக்கம், விலை: ரூபா 3.90, அளவு: 17×12 சமீ.
மாணிக்கப் பிரசுரத்தினரின் 4வது வெளியீடு. ஒருதலைக் காதலை மையமாகக் கொண்ட குறுநாவல். சமூகத்தின் மெல்லுணர்வுகளை நம் வாழ்க்கையின் அங்கங்களாக தனித்தனியே பரவவிட்டு நம்மையே அதன் பாத்திரங்களாக, குணச்சித்திரங்கள் கொண்ட சிற்பிகளாக மாற்றி இலக்கிய சாதனை புரிந்த யுகசந்தி என்ற நாவலின் ஆசிரியர் மணிவாணனின் மற்றுமொரு நாவல் இது. மணிவாணன், முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பிலிருந்து 1958 முதல் இலக்கியப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28886).