மு.பொன்னம்பலம். கொழும்பு 6: புனைவகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 211 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0350-13-1.
இந்த நாவல் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றின் ஒரு வெட்டுமுகமாக அமைகின்றது. சேர்.பொன்னம்பலம் இராமநாதனில் இருந்து ஆரம்பமாகும் பிழையான அரசியல் பார்வை, நாவலரின் சமய, சாதிப் பார்வையோடு சங்கமித்து, இன்றுள்ள தமிழரசுக் கட்சியின் மிக மோசமான சந்தர்ப்பவாதமாகி காந்தியத்தையே துஷ்பிரயோகம் செய்து, மார்க்சியப் பேராசிரியர்களால் இன்னுமொரு நலமெடுப்புக்கு இரையாகி எல்லாம் இழந்த நிலையில் நமது விடுதலைப் போராட்டம் நிற்கின்றது. மற்றும் எல்லாக் கூறுகளும் ஓய்ந்துபோக இப்போது ஒரு பெருவெளியைக் கண்டடைந்துள்ளது. இந்த வெளி, செயல்திறனும், சிந்தனைத்திறனும் உடைய நேர்மையானவர்களால் பயன்படுத்தப்படுமாயின் அது எவரும் சுதந்திரமாக வாழக்கூடிய கூட்டுரிமையைத் தரும். இதுவே இந்நாவலின் குறிக்கோள் என்கிறார் ஆசிரியர். தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றின் ஒரு வெட்டுமுகத் தோற்றத்தை இந்நாவல் வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60906).