13794 சல்லித் தீவு: நாவல்.

செ.குணரத்தினம். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வனசிங்கா அச்சகம், திருமலை வீதி).

102 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4628-42-7.

எளிமையான மொழிநடை, சிறிய வசனங்கள், பாத்திரங்களின் யதார்த்தமான உரையாடல்கள், மட்டக்களப்பு பிரதேச பேச்சு வழக்குப் பயன்பாடு, இருபது சிறிய அத்தியாயங்கள் மூலம் நாவலை நகர்த்திச் செல்லும் நேர்த்தி என்பன இந்நாவலின் சிறப்புக்குக் காரணமாகின்றன. வத்தை ஒன்றை வைத்துக் கடலோடித் தொழில் பார்க்கும் ஒரு சமூகத்தின் கதை இது. மட்டக்களப்புப் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் மட்டக்களப்பு மட்டிக்கழி கிராமத்தையும் மஞ்சத்தொடுவாய் கிராமத்தையும் இணைத்து அந்த நாளைய பழக்கவழக்கங்களையும் சம்பவங்களையும் மீள உயிர்ப்பித்து செ.குணரத்தினம் அவர்கள் இந்நாவலை உருவாக்கியுள்ளார். வத்தைத் தண்டயலாகப் பணியாற்றிய தன் தந்தையாருடன் கூட வாழ்ந்த இளமைக்கால நினைவுகள், அனுபவங்கள் என்பன ஆசிரியருக்கு இந்நாவலில் உயிரோட்டமான நடைக்குக் கைகொடுத்துள்ளன.

ஏனைய பதிவுகள்

15596 முருகையன் கவிதைகள்.

இ.முருகையன் (மூலம்), கு.றஜீபன், க.தணிகாசலம், ச.தனுஜன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 2வது பதிப்பு, 2021, 1வது