13802 பூநகரியிலிருந்து புதுமாத்தளன் வரை: நீந்திக்கடந்த நெருப்பாறு-பாகம்2.

நா.யோகேந்திரநாதன். கிளிநொச்சி: மகாதேவா ஆச்சிரமச் சைவச் சிறார் இல்லம், ஜெயந்தி நகர், 1வது பதிப்பு, மார்ச் 2017. (யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண அச்சகம், கல்வியங்காடு).

xix, 650 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42746-1-7.

முள்ளிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரை நகர்ந்த இறுதிக்கட்டப் போரையும், போருக்குள்ளான எமது மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டு ஆசிரியரால்; எழுதி வெளியிடப்பட்ட நூல். ‘நீந்திக்கடந்த நெருப்பாறு’ என்ற நூலின் இரண்டாம் பாகமாக இது வெளிவருகின்றது. ஒட்டுமொத்த தமிழினம் நீந்திக்கடந்த அந்த நெருப்பாற்றின் நீச்சலில் நிகழ்ந்த உயிர்ப்பலிகள், இழந்த உடல் உறுப்புக்கள், காலம்காலமாகத் தேடிய சொத்துக்கள், இடப்பெயர்வுகள் என்பன வரலாற்றுப் பதிவுகளாகின்றன. போராளிகளின் ஒப்பற்ற வீரத்துடனும், அர்ப்பணிப்புடனும், தொடர்ந்த இந்த நெருப்பாற்று நீச்சல் நிறைவுபெற்ற பொழுது எந்த விடுதலைக்காக இன்னல்களையும் இழப்புகளையும் சுமந்து நாம் முன்நடந்தோமோ அந்த விடுதலை எம்மைவிட்டுத் தொலைத்தூரம் தள்ளப்பட்டு விட்டதை அறிந்தபோதிலும், ஒப்பற்ற இலட்சியத்தின் வேட்கை மங்கிவிடவில்லை என்கிறார் ஆசிரியர். வடிவம் மாறி மீளெழுவதற்காக நீறுபூத்துப் போய்க் காத்திருக்கின்றது என்கிறார்.

ஏனைய பதிவுகள்