ஜி.நேசன். (இயற்பெயர்: ஜி.நேசமணி). கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எகஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எகஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).
(15), 223 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5.50, அளவு: 17.5×12 சமீ.
பிரான்சுக்குச் சொந்தமான கோர்சிக்கா தீவைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் கதை. 1752இல் அங்கு குடியேறிய ஒரு அரேபியத் தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவள் ஜமேலா. 1790இல் 17 வயதாகவிருந்த வேளையில் பலாத்கார பாலியல் வல்லுறவுக்குள்ளான ஜமேலா தன் எதிரிகளைத் தேடிப் பலவந்தமாகக் கொலைசெய்கிறாள். இறுதியில் தானும் கொலையுண்டு மடிகிறாள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40967).