மயில்வாகனம் இரகுநாதன். யாழ்ப்பாணம்: ம.இரகுநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 2007. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிரின்டர்ஸ், 288B, பலாலி வீதி, கந்தர்மடம்).
ix, 100 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.
இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர். ஈழத்துத் தமிழ் நாவல்கள் புலப்படுத்தும் தமிழ் சிங்கள இன உறவு, ஈழத்துத் தமிழ் நாவல்கள் புலப்படுத்தும் மனித உரிமை மீறல்கள், ஈழத்துத் தமிழ் நாவல்களில் தமிழ்த் தேசிய உணர்வின் வெளிப்பாடுகள், போர்க்கால வாழ்வின் அவலங்கள் ஆகிய நான்கு இயல்களினூடாக இவ்வாய்வை நகர்த்திச் செல்கின்றார். இவ்வாய்வில் 1960 முதல் 1980 வரையிலான காலகட்டத்து நாவல்களே ஆய்வுக்கெடுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 603927).