13818 சிப்பிக்குள் முத்து.

கி.லக்ஷ்மணன் (மூலம்), திருமதி மங்களம் வாசன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

479 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 800., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-9233-74-9.

தமிழ் அறிஞரும் இலங்கை கல்வி அமைச்சின் முன்னாள் வித்தியாதிபதியுமான அமரர் கி. லக்ஸ்மணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘சிப்பிக்குள் முத்து’ தமிழகத்தில் அமரர்கி. லக்ஸ்மணன் நூற்றாண்டு வெளியீடாக வெளியாகியுள்ளது. கட்டுரைகளுக்குப் பொருத்தமான ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்ஸ்மணன் அவர்கள் இலங்கை- தமிழக தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு இது. இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும் பொது நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின் தொகுப்பான இந்த அரிய நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நூலை அவுஸ்திரேலியாவில் வாழும் அமரர் கி.லக்ஸ்மணன் அவர்களின் புதல்வி திருமதி மங்களம் வாசன் தொகுத்துள்ளார். கி.லக்ஸ்மணன் அவர்களின் நூற்றாண்டு கடந்த 2018 மே மாதம் தொடங்கியிருக்கிறது. இதனை முன்னிட்டு இந்நூல் வெளியாகியிருக்கிறது. வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் (அமரர்) க. சிவப்பிரகாசம், வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் திரு. டி. எம்.சுவாமிநாதன் ஆகியோர் உட்பட பலர் கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற காலத்தில் இவர்களின் தமிழ் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் கி.லக்ஸ்மணன் அவர்கள், தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியைச் சரியாகவும் பிழையின்றியும் எழுதவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பவர். இவர் 1960 இல் எழுதிய இந்திய தத்துவ ஞானம் நூல் பல பதிப்புகளைக் கண்டுள்ளதுடன் இலங்கை தேசிய சாகித்திய விருதும் தமிழ்நாடு அரசின் விருதும் பெற்றது. சிப்பிக்குள் முத்து நூலுக்கு சி.வி. விக்னேஸ்வரன், டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம், ஆகிய பிரிவுகளுக்குள் அடங்கும் 64 தமிழ்க் கட்டுரைகளும் ஒனபது ஆங்கிலக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்