கொழும்பு திருக்குறள் மன்றம் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: திருக்குறள் மன்றம், 2வது பதிப்பு, ஜனவரி 1960, 1வது பதிப்பு, டிசம்பர் 1955. (சென்னை 1: ஸ்ரீமகள் அச்சகம்).
176 பக்கம், விலை: இந்திய ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.
இத்தொகுதியின் வழியாக திருக்குறளின் பல்வேறு சிறப்புக்கள் இருபது அறிஞர்களின் வாயிலாக பதிவுசெய்யப்படுகின்றன. திருக்குறளில் புதைபொருள்கள் (கி.ஆ.பெ.விஸ்வநாதம்), கயமை (கா.அப்பாத்துரை), இல்லைதான் வித்தியாசம் (இரசிகமணி டி.கே.சி.), வெஃகாமை (கோவைக்கிழார்), திருக்குறளின் சிறப்பியல்புகள் (வண. எச்.ஏ.பாப்ளி), நல்லொழுக்கத்தின் சிறப்பு (வண. எச்.ஏ.பாப்ளி), சால்பின்-சான்றோர் (வி.ஏ.ஜோன்பிள்ளை), சேக்கிழாரது வள்ளுவர் (அ.ச.ஞானசம்பந்தன்), படைச்செருக்கில் ஒரு குறள் (க.கிருஷ்ணபிள்ளை), அடக்கமும் ஒழுக்கமும் (அ.மு.பரமசிவானந்தன்), வள்ளுவர் கூறும் உழவர்குடி (அ.சிதம்பரனார்), தெரிந்து தெளிதல் (என்.சுப்பு ரெட்டியார்), அருளுடைமை (சதாசிவம் அமிர்தாம்பிகை), அரசியல் நினைவுகள் (எஸ்.எம்.கமால்தீன்), வள்ளுவன் கண்ட தமிழறம் (வி.சீ.கந்தையா), கண்ணோட்டம் (மு.இராசாக்கண்ணனார்), தெரிந்து வினையாடல் (சொ.முருகப்பா), வள்ளவரும் பிறரும் (கணேசு), பெண்ணிற் பெருந்தக்க யாவுள? (கா.வேல்முருகன்), வள்ளுவர் கண்ட பெண்மை (தி.கமலபூஷணி) ஆகிய தலைப்புக்களில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31535).