வாகரைவாணன் (இயற்பெயர்: ச.அரியரத்தினம்). யாழ்ப்பாணம்: சுயாதீன நன்மகன்கள் 92, உயர்தரப் பிரிவு-1992, யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 104 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ.
வாகரைவாணன் எழுதிய ஆறு மொழியியல் சார்ந்த கட்டுரைகளையும், பன்னிரண்டு தமிழர் வரலாறு-பண்பாடு பற்றிய கட்டுரைகளையும் இந்நூல் கொண்டுள்ளது. பிறமொழிகளில் வழங்கும் தமிழ்மொழிச் சொற்கள், மட்டக்களப்புப் பிரதேசச் சொற்கள் ஓர் ஆய்வு, சொல்லாய்வு உறுதிப்படுத்தும் மட்டக்களப்புத் தமிழர் தொன்மை, சரசுவதி, லட்சுமி, பார்வதி என்னும் பெயர்களும் அவற்றின் விளக்கங்களும், மட்டக்களப்புத் தமிழ், ஆங்கிலச் சொற்களின் உருவாக்கத்திற்கு ஆதாரமான லத்தின் சொற்கள் ஆகிய தலைப்பிலான கட்டுரைகள் மொழியியல் துறைசார்ந்து எழுதப்பட்டவை. தமிழர் வரலாறு, பண்பாடு சார்ந்ததாக எழுதப்பட்டவையான தமிழர் வரலாற்றில் சமயங்கள், தமிழ் இலக்கியத்தில் அறிவியல், மகாகவி பாரதியும் அறிவே தெய்வம் என்னும் உண்மையும், இளங்கோவின் கண்ணகியும் கம்பனின் இராமனும், ஊர்ப்பெயர் சொல்லும் ஈழத்தமிழர் வரலாறு, கற்பனையும் வரலாறும் கலந்ததொரு காவியம் சிலப்பதிகாரம், போர்க்கால இலக்கியம் புறநானூறு, மட்டக்களப்புத் தமிழகத்தில் வழங்கும் தொல்காப்பியர் கூறும் பிசியும் முதுமொழியும், தனித்தமிழ் இயக்கம் அதன் பின்னணியும் விளைவுகளும், திருகோணமலை என்னும் இடப்பெயர் சொல்லும் இலங்கைத் தமிழர் வரலாறு, சங்ககாலத் தமிழரின் சமயச்சார்பற்ற விழாக்கள், இந்து, கத்தோலிக்க கடவுட் கோட்பாட்டில் காணப்படும் ஒற்றுமை ஆகிய பன்னிரு கட்டுரைகளும் இரண்டாம் பிரிவில் இடம்பெற்றுள்ளன.