13828 கலைச்செல்விக் காலம்.

சிற்பி (இயற்பெயர்: சி.சிவசரவணபவன்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மே 2016.(அச்சக விபரம் தரப்படவில்லை).

xii, 181 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-8354-63-6.

‘சிற்பி’ சி.சிவசரவணபவன் (28 பெப்ரவரி 1933 – 9 நவம்பர் 2015) ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாசிரியர் எனப் பல தளங்களிலும் இயங்கியவர். கலைச்செல்வி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டம் காரைநகரில் சிவசுப்பிரமணியக் குருக்கள்-சௌந்தராம்பாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். கந்தரோடையில் வாழ்ந்து வந்தவர். கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்றார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார். ஆடி 1958 முதல் ஆவணி 1966 வரை கலைச்செல்வி என்ற  சஞ்சிகையை இவர் வெளியிட்டுவந்தார். ஈழத்துத் தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் ‘கலைச்செல்வி காலம்’ என்றொரு வரலாற்றுக் காலத்தை இச் சஞ்சிகையின் வரவு ஆழமாகப் பதிவுசெய்திருந்தது. ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சியிலே கலைச்செல்விக்கு இருந்த வகிபாகத்தினை நேர்மையான முறையிலே சுட்டிக்காட்டுவதாக இந்நூல் அமைகின்றது. கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி அவர்கள் ஞானம் சஞ்சிகையின் 97ஆவது இதழிலிருந்து 140ஆவது இதழ் வரை எழுதிய தொடர்கட்டுரையின் தொகுப்பே இந்நூலாகும். 39ஆவது ஞானம் பதிப்பக வெளியீடாக இந்நூல் வெளிவருகின்றது.

ஏனைய பதிவுகள்

14904 திருவாசகம் ஸ்ரீசபாரத்தினம் சுவாமிகள் நினைவு மலர்.

த.துரைராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: ஸ்ரீசபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை, 5ஆவது ஆண்டு குருபூசை நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஜனவரி 1993. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (28)