ஏ.பீ.எம்.இத்ரீஸ் (A.B.M.Idrees). வாழைச்சேனை 5: சோனகம், மஹ்மூட் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, 2011.(தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், ஸ்டேஷன் வீதி).
194 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0697-02-1.
நான்கு பகுதிகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புத்துயிர்ப்பும் புரிதல்களும் என்ற முதலாம் பகுதியில் புத்துயிர்ப்பும் புரிதல்களும், இஸ்லாமிய இலக்கியம்:வரைவிலக்கணம் நிலைப்பட்ட கருத்தாடல், இஸ்லாமிய இலக்கியத்தின் தனிப்பண்புகள், இலக்கியவாதியின் உளப்பாங்கு, படைப்பாளியும் முஸ்லிம் அடையாளமும், இஸ்லாமும் கவிதையும், இஸ்லாமியக் கதை பற்றி, அல் குர் ஆனின் நோக்கில் நாவல் இலக்கியம், இஸ்லாமும் இலக்கிய மதிப்பீடும் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இஸ்லாமிய இலக்கிய வரலாறும் சோனக இலக்கியமும் என்ற 2ஆவது பகுதியில் அறபு இஸ்லாமிய இலக்கிய மரபு, சோனக இலக்கியம் ஆகிய இரு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இஸ்லாமும் மேற்கத்திய இலக்கிய இயக்கங்களும் என்ற 3ஆவது பகுதியில் அழகியல் இயக்கங்கள், கோட்பாட்டு இயக்கங்கள் ஆகிய இரு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இஸ்லாமிய இலக்கியத்தின் எதிர்காலம் என்ற 4ஆவது (இறுதிப்)பகுதியில் இஸ்லாமிய இலக்கியத்தின் எதிர்காலம், இலக்கியக் கல்வியும் இலக்கியப் பயில்வும், கதையும் தஃவாவும், சிறுவர் இலக்கியம், இணைய இலக்கியம், வாசகனின் பரிந்துரை ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.