அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல.85, கந்தசுவாமி கோவில் வீதி).
140 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-7654-15-7.
தமிழிலக்கிய வரலாற்றுக் காலப் பகுப்பு, சங்ககாலம் பற்றிய சர்ச்சை, விநாயகப் பெருமானும் தமிழிலக்கியமும், புறநானூறும் தமிழரும், சிங்கப்பூரைச் சொர்க்கபுரியாக்கிய தமிழ்ப் பெண்புலவர் ஆகிய ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 39ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது. வவுனியா பம்பைமடுவை பிறப்பிடமாகக் கொண்ட அகளங்கன் ஆசிரியராகப் பல்வேறு பாடசாலைகளிலும் பணியாற்றியவர். பன்முக ஆளுமைகளைக் கொண்ட இவர் 48 நூல்களை எழுதி வழங்கிய பன்னூலாசிரியர். தனது நூல்களுக்காக தேசிய சாகித்திய மண்டல விருது, வடக்கு-கிழக்கு மாகாண சிறந்த நூல் பரிசு, வடக்கு மாகாண சிறந்த நூற் பரிசு, எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய தமிழியல் விருது, இலங்கை இலக்கியப் பேரவை விருது ஆகியவற்றைப் பெற்றவர்.