13834  சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கோலங்கள்.

க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xviii, 314 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22.5×15 சமீ.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினரால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பெற்ற முதல் ஆய்வரங்கில் சிலப்பதிகாரம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேற்படி அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். தமிழ் நாட்டில் சமணம்: கி.மு.300-கி.பி.200 (வெ.வேதாசலம்), தமிழ் நாட்டில் சமணம்: கி.பி.200-கி.பி.600 (வெ.வேதாசலம்), தமிழகத்தில் வைணவ சமயம்: கி.மு.300-650 (கு.சேதுராமன்), தமிழகத்தில் வைணவ சமயக் கலை வரலாறு: கி.பி.600-1700 (கு.சேதுராமன்), சிலப்பதிகார காலப்பின்னணியில் தொல்லியற் சான்றுகள் காட்டும் ஈழத்துச் சிவ வழிபாடு (பரமு புஷ்பரட்ணம்), Manifestation of Goddess Pattini in Sinhala Society (அனுராதா செனவிரத்தின), சிலப்பதிகார ஆசிரியரும் இலக்கியப் பண்புகளும் (அ.சண்முகதாஸ்), உளப்பகுப்பாய்வு நோக்கில் சிலம்பில் சில செய்திகள் (கந்தசாமி அன்ரன் டயஸ்), சிலப்பதிகாரத்தில் அறமும் அரசியலும் (வி.சிவசாமி), அரசுகளும் நாட்டுப் பிரிவுகளும் (சி.க.சிற்றம்பலம்), சிலப்பதிகாரம் காட்டும் சமூக நீதி (நா.ஞானகுமாரன்), சிலப்பதிகாரத்தில் பெண் (சோ.கிருஷ்ணராஜா), சிலப்பதிகாரத்தில் அடைக்கலச் சிந்தனை (வை.கா.சிவப்பிரகாசம்), சிலப்பதிகார அழகியல் (ஏ.என்.கிருஷ்ணவேணி), சிலப்பதிகாரத்தாலும் அதன் உரைகளாலும் உணரப்படும் இசைத்தமிழ் (கே.சிவபாலன்), சிலப்பதிகாரக் கண்ணகியும் கண்ணகி வழக்குரைக் கண்ணகியும் ஒப்பியல் நோக்கு (செ.யோகராசா), கண்ணகியும் மாதவியும் (மனோன்மணி சண்முகதாஸ்), கோவலன் – கண்ணகி, மாதவி ஆளிடைக் கவர்ச்சி ஓர் உளவியல் ஆய்வு (க.சிவானந்த மூர்த்தி), சிலப்பதிகாரம் கொண்டதும் கொடுத்ததும் (க.இரகுபரன்) ஆகிய  ஆய்வுக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33008).

ஏனைய பதிவுகள்

5 omgangsvormen hierop casinos bedonderd worden

Inhoud Inschatting Koningsgezin gokhal review Mythology gokhuis gokkasten Oranje gokhal geloofwaardig? Oranje Casino Live Bank spelle Amerikaan Tezamen Vindt Winnende Buitenkans Van Gokspel Achteruit Voordat

Maximize your Victories

Content Join Otherwise Log in To own Private Incentives Having A personal Membership! | do bingo apps really pay Very first Deposit Incentive Around C$600,