கே.எஸ்.சிவகுமாரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆவணி 2018. (நெல்லியடி: பரணீ அச்சகம்).
viii, 248 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-77-0.
ஜீவநதியின் 103ஆவது வெளியீடாக திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் எழுதிய 73 சிறுகதை ஆசிரியர்களினது தொகுப்புப் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையர்கோன், செ.கணேசலிங்கன், வ.அ.இராசரத்தினம், டொமினிக் ஜீவா, காவலூர் இராசதுரை, நீர்வை பொன்னையன், வரதர், கே.டானியல், நாவேந்தன், பவானி ஆழ்வாப்பிள்ளை, எம்.ஏ.ரஹ்மான், செ.கதிர்காமநாதன், என்.எஸ்.எம்.ராமையா, செ.யோகநாதன், மு.தளையசிங்கம், மண்டூர் அசோகா, புலோலியூர் க.சதாசிவம், நெல்லை க.பேரன், அ.யேசுராசா, சாந்தன், மு.திருநாவுக்கரசு, நா.முத்தையா, யோ.பெனடிக்ற் பாலன், சாந்தன், லெ.முருகபூபதி, சுதாராஜ், மருதூர் மஜீத், காவலூர் எஸ்.ஜெகநாதன், குப்பிளான் சண்முகம், க.சட்டநாதன், தெளிவத்தை ஜோசப், மு.கனகராசன், முல்லைமணி, எஸ்.பொன்னுத்துரை, நாகூர் எம்.கனி, முத்து இராசரத்தினம், க.தணிகாசலம், கோகிலா மகேந்திரன், எஸ்.வி.தம்பையா, கே.டானியல், என்.சோமகாந்தன், உமா வரதராஜன், ஆ.ஐ.ளு.முஸம்மில், ளு.ர். நிஹ்மத், உடுவை தில்லைநடராஜா, அருண் விஜயராணி, மாத்தறை ஹஸினா வஹாப், சோ.ராமேஸ்வரன், ராஜஸ்ரீகாந்தன், அ.முத்துலிங்கம், மு.பொன்னம்பலம், மாத்தளை சோமு, புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், ரு.டு.ஆதம்பாவா, நீர்வை பொன்னையன், திருக்கோவில் கலியுவன், ரஞ்சகுமார் ஆகியோரது படைப்புக்கள் பற்றிய தனித்தனிக் கட்டுரைகளுடன், பொதுவான ஈழத்து இலக்கியப் போக்குகள் பற்றிய சில கட்டுரைகளுமாக மொத்தம் 73 திறனாய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63861).