தி.செல்வமனோகரன். யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
viii, 120 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-42192-2-9.
2007 முதல் 2017 வரையான காலகட்டத்தில்; ஆசிரியரால் மேடைகளில் நிகழ்த்தப்பட்ட உரைகளினதும் சஞ்சிகைகளில் எழுதப்பட்ட கட்டுரைகளினதும் தொகுப்பே இந்நூலாகும். குறிப்பேட்டிலிருந்து, த.அஜந்தகுமாரின் ஒரு சோம்பேறியின் கடல், புதிய நூற்றாண்டில் ஈழத்து வடபுலத் தமிழ்க் கவிதைகள், ஈழத்து நவீன இலக்கிய விமர்சனமும் கலாரசனையும், துக்கத்தின்மீது கட்டமைக்கப்பட்டதே வாழ்க்கை, க.சட்டநாதனின் கதைகளில் பெண்கள் குழந்தைகள், தாமரைச்செல்வியின் படைப்புலகம், ஈழத்துப் பெண்ணிலைவாத சஞ்சிகைகள், அக்கினிக்குஞ்செனத் தகித்தெழும் புனைவு, வெற்றிச்செல்வியின் எழுத்துருவில் பம்பைமடு, மனிதனை மண்புழுவாக்கிய யுத்தம் ஆகிய பதினொரு படைப்பாக்கங்களை செல்வமனோகரன் இத்தொகுப்புக்கெனத் தேர்ந்தளித்துள்ளார்.