ந.மயூரரூபன். வல்வெட்டித்துறை: எழினி வெளியீடு, பழைய பொலிஸ் நிலைய வீதி, வல்வெட்டி, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன் கிழக்கு).
(10), 11-62 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-955-54304-2-5.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிகள் மீதான வாசிப்பு. இதில் கலை இலக்கியப் படைப்புகள் மீதான ஆசிரியரின் கருத்துரைகள் தனித்தனிக் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. பாலையாய் நீளும் தாபத்தின் வெளி -சட்டநாதனின் நீளும் பாலை, எஸ்போஸ்-வலியறியும் வார்த்தைகள், பிரிகோலேஜ் மனம்-இராஜேஸ்கண்ணனின் இறுக்கம், முரணி-சண்முகனின் அழகியின் துயரங்கள், மொன்ரேஜ் உத்தி-பா.அகிலனின் சுவிசேஷங்கள், புற உலகின் இயல்புகள்-ந.சத்தியபாலன் கவிதைகள், சமூக மெய்மை தரும் தொல்மனப்படிமம்-துவாரகனின் தூக்கணாங்குருவிக்கூடு, இரண்டாம் ஜீவிதம்-தானா விஷ்ணுவின் மூன்று நட்சத்திரங்கள், உயர் மெய்மைச் சடங்கு-ஞானம் போர் இலக்கியச் சிறப்பிதழும் பிறவும், மனமொழியின் செய்தி-த.அஜந்தகுமாரின் அப்பாவின் சித்திரங்கள், கருத்தியல் வெளி-சி.விமலனின் கிளை நதியின் பிரவாகம், வெளியில் நிற்கும் உண்மைகள்-சித்தாந்தன் கவிதைகள், பிஞ்சுப்பழம்-தெணியானின் புதிய கோணம், குறுக்குமறுக்கு-ரஷ்மியின் ஈ தனது பெயரை மறந்துபோனது, அகத்தில் அழுந்தும் புறம்-கருணை ரவியின் கடவுளின் மரணம் ஆகிய 15 படைப்பாக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதில் இரண்டு கட்டுரைகள் தவிர்த்து மற்றைய அனைத்தும் உதயன் வாரமலர், சூரியகாந்தியில் பிரசுரமானவை. றஷ்மியின் தொகுதி மீதான வாசிப்பு சுடரொளி வாரப்பத்திரிகையில் வெளிவந்தது. கருணைரவியின் சிறுகதைத் தொகுதி மீதான வாசிப்பாயமைந்த கட்டுரை ‘தவிர’ கலை, இலக்கிய சஞ்சிகையில் வெளிவந்தது. ந.மயூரரூபன் யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தில் 1978இல் பிறந்தவர். கவிதை, சிறுகதை, கட்டுரை என இலக்கியப் படைப்புத்தளங்களில் இயங்கிவருபவர். புகைப்படக் கலை, நாடகக் கலை என்பவற்றிலும் ஈடுபட்டு வருபவர். தற்போது வல்வெட்டித்துறையில் வாழ்ந்து வருகிறார். (குலக்குறியம் (Totemism) என்னும் சொல்லின் அருட்டலில் உருவானது சொற்குவியம்-ஆசிரியர்).