வி.ஜீவகுமாரன் (மூலம்), கா.மு.சேகர் (பதிப்பாசிரியர்). தமிழ்நாடு: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(8), 79 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 20.5×14.5 சமீ.
புலம்பெயர் தமிழரின் வாழ்வியலை எடுத்துரைக்கும் சிறுகதைகள் குறித்த சிறந்த பதிவுகளைத் திறனாய்வு அடிப்படையில் ஜீவகுமாரன் அவர்கள் இவ்வாய்வில் எடுத்துக் கூறியுள்ளார். இந்நூலின் முக்கிய நோக்கங்களாக, 1.புலம்பெயர் இலக்கியம் என்பதற்கான வரைவு, என்பதனையும், 2011ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டிற்கென ஆசிரியரால் தொகுத்து வழங்கப்பட்ட 18 நாடுகளில் வாழும் 50 சிறுகதை ஆசிரியர்களின் தொகுப்பான ‘முகங்கள்’ என்ற நூலின் வழியாக புலம்பெயர் வாழ்வினை ஆய்வுசெய்தல் ஆகிய இரு நோக்கங்களும் அமைந்துள்ளன. புலம்பெயர் இலக்கியம்: புதிய வரைவு, புலம்பெயர் தமிழ்ச் சிறுகதைகள்-ஒரு பார்வை, புலம்பெயர் தமிழ்ச் சிறுகதைகள் நோக்கும் போக்கும், முடிவுரை ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈழத்துப் படைப்பாளியான வி.ஜீவகுமாரன் டென்மார்க் தேசத்தில் புலம்பெயர்ந்து வாழ்பவர்.