13850 புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்.

ஈழபாரதி (இயற்பெயர்: எட்வர்ட் ஜுட் நிக்சன்). திருச்சி 620003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (சென்னை: கப்பிட்டல் இம்பிரஷன்).

72 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21×14 சமீ.

பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் கவிஞர் ஈழபாரதியின் (Edward Jude Nixon, 165, Avenue Paul Vaillant Conturier 93120, Lacourneuve, France) இந்நூல் தமிழீழ விடுதலைப் போரின்போது புலம்பெயரவேண்டி ஏற்பட்ட ஈழத்தமிழர்களின் நிலையை-புலப்பெயர்வின் வலிகளை ஆத்மார்த்தபூர்வமாக, உணர்வுக்கோலங்களாகக் கட்டுரைவடிவில் வழங்குகின்றது. புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும், அகதி, இழப்புகளின் மொழி, தமிழ்ச்சாதி, மனித உரிமைகள், புகலிடப் பார்வை, தேயிலைத் தோட்டங்கள், தொப்புள்கொடி உறவுகள், கடைசிக்கவிதை, கரைசேராப் படகுகள், ஹைக்கூவும் ஈழமும், சாவும் சர்வதேசமும், அகதியும் இந்தியக் குடியுரிமையும், தமிழக முகாம்கள் ஆகிய 14 தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Better Slots Web sites 2024

Articles Try Bitcoin Slot Websites As well as Legal? Make use of the Available on the internet Resources How to Claim Online casino No-deposit Bonus