செ.துரையப்பா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கலாபூஷணம் செ.துரையப்பா, இல. 4, முதலியார் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
151 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
துறையூர் க.செல்லத்துரை என இலக்கிய உலகில் அறியப்பெற்றவர் அமரர் கதிரேசன் செல்லத்துரை (1933-2017). மட்டக்களப்பின் தென் எல்லைக் கிராமமான துறைநீலாவணையில் பிறந்த இவர் காத்தான்குடி மகா வித்தியாலயத்தில் ஆங்கில அறிவை விருத்திசெய்துகொண்டு பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பணிசெய்து உப அதிபராக ஓய்வுபெற்றவர். அவரது மறைவின் முதலாமாண்டு நிறைவைக் குறித்து வெளியிடப்படும் மலர் இது. இதில் பாலர் பாடல்கள், பெரியார்கள், தமிழ், காதற் கவிதைகள், பொதுக் கவிதைகள், பக்திப் பாடல்கள், கட்டுரைப் படைப்புக்கள் என ஏழு பிரிவுகளின்கீழ் அவரால் படைக்கப்பட்ட ஆக்கங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. கட்டுரைப் பிரிவில் மாற்றமடையும் உலகில் மனிதர்கள், கிராமிய இலக்கியம் வதனமார் (காவியம்) சடங்கு, துறைநீலாவணைக் கண்ணகை அம்மன் கோயில், வாலாட்டும் கொம்பர்களை முகம் நிறைந்த சீதேவியாக வர்ணிக்கும் உழவன் ‘தாயே பொலி’ என்று பூமாதேவியை வாழ்த்துகின்றான், ஒற்றுமை, அன்னையர் தினம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62990).