சுபாசினி கேசவன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (ஹோமாகம: சத்சர கிரப்பிக்ஸ், 240/1, ஹபரகட).
x6, 162 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-9117-08-4.
கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர், சுபாசினி கேசவன் அவர்களை பதிப்பாசிரியராகவும், சுபாசினி கிருபாகரன், ஜெனித்ரா இராசநாயகம் (கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர்கள்) ஆகியோரை உதவிப் பதிப்பாசிரியர்களாகவும் கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் வெளிப்பாட்டை வளர்த்தெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்திவரும் போட்டித் தொடரில் 2007ம் ஆண்டுக்கான போட்டியில் பரிசுபெற்ற கவிதைகள், சிறுகதைகள், பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. 9 பாடல்களும், 9 சிறுகதைகளும், 8 கவிதைகளும் சிறுவர் கதை ஆக்கத்தில் வெற்றிபெற்றோர் விபரம், சிறுவர் கதை ஆக்கத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்டோரின் விபரம் ஆகியவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47999).