இரா.தில்லைராஜன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மாதனையூர் இரா.தில்லைராஜன், குறுக்கு வீதி, நீர்வேலி வடக்கு, நீர்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (கல்வியங்காடு: டினேஷ் அச்சகம், பருத்தித்துறை வீதி).
v, 54 பக்கம், விலை: ரூபா 100, அளவு: 20.5×14.5 சமீ.
தமிழ்நாட்டின் பிரபல்யமான சில திருத்தலங்களின் சிறப்புகளைக்கூறும் தொகுப்பாக இப்பிரயாண வழிகாட்டி நூல் வெளிவந்துள்ளது. சுருக்கமாகவும், தெளிவாகவும் திருத்தலங்கள் பற்றிய முக்கியமான அம்சங்களைத் தாங்கியுள்ள இந்நூல், தமிழ்நாட்டின் வணக்கத் தலங்களுக்குச் செல்ல எண்ணுவோருக்குச் சிறந்த வழிகாட்டியாகவுள்ளது. திருத்தலத்தை கண்முன்னே கொண்டுவரும் விதமாக மிக அழகாக ஒவ்வொரு தலங்களின் சிறப்புகளும் விபரிக்கப்பட்டுள்ளன. சிதம்பரம், தஞ்சைப் பெரியகோவில், ஸ்ரீரங்கம், உச்சிப்பிள்ளையார், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், திருமலை வேங்கடவன், காஞ்சித் திருக்கோயில், குடந்தைக் கோயில்கள், திருக்கடவூர் அபிராமி ஆலயம், இராமேஸ்வரம், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனியாண்டவர் கோவில், சுவாமி மலை, தணிகைமலை, பழமுதிர்ச்சோலை, திருவாரூர், திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி ஆகிய 20 திருத்தலங்களின் சிறப்புக்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. சென்னை மற்றும் திருச்சியிலிருந்து இத்திருத்தலங்களுக்குச் செல்வதற்கான பயணத்தூர அட்டவணையும் இணைக்கப்பட்டிருக்கின்றது. சைவத் திருத்தல யாத்திரீகர்களுக்கு இலகுவான பயணக் கையேடாக இந்நூல் அமைந்துள்ளது.