எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி). சாய்ந்தமருது 3: வல் கலமி வெளியீடு, ‘வரித மஹால்’ , அல்-ஹிலால் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1992. (கொழும்பு 9: மிலாக்ஷ், 6 அபய பிளேஸ்).
(8), 72 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 40., அளவு: 18.5×12 சமீ.
மதீனத்துர் ரசூல் என உலக முஸ்லீம்களினால் அழைக்கப்படும் மதீனா மாநகர் பற்றி அறிந்துகொள்வதற்கு ஆசையுடையவர்களுக்கும் வியாபார நோக்கங்களுக்காகவும் கல்வித் தேவைகளுக்காகவும் அங்கு செல்லும் எம்மவர்கள் அந்நகரின் பழமையையும் அதன் பெருமைகளையும் அந்நகரில் அமைந்து கிடக்கும் சரித்திரப் புகழ்பெற்ற இடங்களையும் பற்றிய விபரமான, பல ருசிகரமான, பயனுள்ள தகவல்களை இந்நூல் தருகின்றது. மதினா முனவ்வறா (மதினா முனவ்வறா வரலாறு, மதினாவின் மறுபெயர்கள், ஹதீஸின் ஒளியிலே மதினாவின் சிறப்புக்கள், எது சிறந்த நகரம்?, மதினாவின் மாணிக்கங்கள், மதினாவின் விசேட அம்சங்கள்), மஸ்ஜிதுந் நபவி (மஸ்ஜிதுந் நபவியின் சிறப்புகள், றவ்ளா ஷரீப், மிம்பர், தூண்கள், திண்ணைவாசிகள், ஹூஜ்றா முபாறக்கா, அறிவுச் சோலை, விஸ்தரிப்பு வேலைகள், இரு சோக சம்பவங்கள்), மதீனாவின் முக்கிய இடங்கள் (மஸ்ஜிதுல் குபா, மஸ்ஜிதுல் கிப்லதைன், மஸ்ஜிதுல் முஸல்லா, மஸ்ஜிதுல் இஜாபா, மஸ்ஜிதுல் ஜும்ஆ, மஸ்ஜிதுல் பதஹ், மஸ்ஜிது தில் ஹூலைபா, உஹது மலை, ஜன்னதுல் பகீஃ, பிஃறு உதுமான், அல்குர் ஆன் அச்சகம், இஸ்லாமியப் பல்கலைக்கழகம்) ஆகிய மூன்று பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் அறபு மொழியிலும் இலக்கியத்திலும் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39095).