நா.முத்தையா. ஏழாலை: ஆத்மஜோதி தியான மணிமண்டபம், 3வது பதிப்பு, வைகாசி 2006, 2வது (கனேடிய) பதிப்பு, 2003, 1வது (நாவலப்பிட்டி) பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அகரம் கணினிப் பதிப்பகம், 351, மணிக்கூண்டு வீதி).
viii, 52 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 20.5×14.5 சமீ.
1954-55 காலப் பகுதியில் ஆத்மஜோதி இதழ்களில் தொடராக ஆசிரியர் எழுதியிருந்த ஸ்ரீ கேதார் பத்திரி யாத்திரைப் பயண அனுபவத் தொடரின் நூல்வடிவம் இதுவாகும். இந்நூலில் பிரயாண ஆரம்பம், சென்னையில் ஒரு நாள், வடதிசைப் புகையிரத யாத்திரை அனுபவம், யாத்திரைக்கு வேண்டிய பொருட்கள், கிராம அனுபவங்கள், ரிஷிகேஷ், கெதார்நாத், கேதாரகௌரி, பத்திரிநாத் ஆகிய தலைப்புகளில் தனது தீர்த்த யாத்திரையின் அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளார். இப்பயண நூலுக்கு முன்னுரையை சுத்தானந்த பாரதியார் வழங்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 205540).