தி.தவரத்தினம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இனிய தென்றல் பதிப்பகம், 135, கனல்பாங்க் றோட், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
32 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-0254-38-5.
பாடசாலை மாணவரின் கல்வித்தேவையை மனதிருத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குரிய சமுத்திர வலயம், கடல்நீரேரிகள், முனைகள், இலங்கையில் உள்ள குடாக்கள், உப்பங்களி/உப்பளங்கள், கடல் அரிப்புக்கு உள்ளாகும் பிரதேசங்கள், இலங்கையில் மீன் ஒதுக்குப் பிரதேசங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடிப் பயிற்சி நிலையங்கள், துறைமுகங்கள், சுற்றுலாக் கடற்கரைகள், இலங்கைக்குரித்தான தீவுகள், சமுத்திரங்கள், சமுத்திர நீரோட்டங்கள், உலகிலுள்ள சமுத்திர ஆழிகள், உலகின் கரையோர முனைகள், உலக வளைகுடாக்கள், உலக விரிகுடாக்கள், உலகின் பெருங்குடாக்கள், உலகக் கடல்கள், உலக மீன்பண்ணைகள், உலகப் பகழ்பெற்ற துறைமுகங்கள், உலகின் தொடு கடல்கள், உலகின் கால்வாய்கள், உலகின் தீவுகள், உலக நீரிணைகள், உலகின் முனைகள் ஆகிய 27 பாடங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது.