வி.ரி.இளங்கோவன். மதுரை 625018: தழல் பதிப்பகம், FF-3,A-பிளாக், R.S.L. கோல்டன் அபார்ட்மென்ட்ஸ், திண்டுக்கல் பிரதான சாலைஇ விளாங்குடிஇ 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (மதுரை 625 002: மதுரை ஆர்ட்ஸ் அன்ட் ஸ்கிரீன்ஸ், செல்லூர்).
128 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21×14 சமீ.
சமூகத் தளத்தில் பணியாற்றியஇ பணியாற்றும் ஆளுமைகள் பற்றிய அறிவை இளம் தலைமுறையினரிடம் தொற்ற வைக்கும் முயற்சியாக ‘மண் மறவா மனிதர்கள்’ என்ற தலைப்பில் 2001இலும்இ பின்னர் 2011இல் மீள்பதிப்பாகவும் ஒரு நூல் வெளிவந்திருந்தது. அந்நூலாசிரியர்இ புதிய தலைப்பில் முன்னைய பதிப்பில் இடம்பெற்ற கட்டுரைகளில் தேர்ந்த சிலவற்றையும்இ புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கி இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலில் சர்வதேச புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன்இ கம்யூனிஸ்ட் கார்த்திகேசன், அற்புதமான மனிதன் (எழுத்தாளர்) டானியல்இ புதுநெறி காட்டிய பேராசான் கைலாசபதிஇ தான்தோன்றிக் கவிராயர் பல்கலை வேந்தர் (கவிஞர்) சில்லையூர் செல்வராசன்இ சீனத்துச் சின்னத்தம்பி (பத்திரிகையாளர் வீ.சின்னத்தம்பி), உலகம் போற்றும் தமிழறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி, அறிவுப் பசிக்கு உதவிய (புத்தகசாலை அதிபர்) ஆர்.ஆர்.பூபாலசிங்கம்இ மூத்த எழுத்தாளர் காவலூர் இராஜதுரைஇ ஆங்கில இலக்கியத்துறையில் உலகப் புகழ்பெற்ற இலங்கையர் அழகு சுப்பிரமணியம்இ புகழ்பூத்த பேராசிரியர் வி.சிவசாமி, சாதாரண மக்களின் விடிவுக்காக பேனா பிடித்த படைப்பாளி நாவேந்தன்இ ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தை சி.இராமலிங்கம், எல்லோருக்கும் இனிய மனிதர் (பத்திரிகையாளர்) ஆர்.சிவகுருநாதன், புத்தக வர்த்தகர் அச்சக வித்தகர் செம்மல் சுப்பிரமணியம், மருத்துவக்கலையில் இலக்கியத் தமிழ்கண்ட வித்தகர் விஸ்வபாரதி, தொண்டுக்கு ஒரு திரு (சர்வோதயம் க. திருநாவுக்கரசு), முகத்தார் யேசுரட்ணத்தின் கலைப் பயணம், ஈழத்திற்குப் பெருமைசேர்த்த இசையரசன் குலசீலநாதன், மக்கள் மனம்நிறைந்த நிர்வாகி சடாட்சர சண்முகதாஸ், கவிஞர் சு.வில்வரத்தினம்-சில நினைவுக் குறிப்புகள், பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட வேதவல்லி கந்தையாஇ நாடுபோற்றும் எங்களூர்த் தமிழறிஞர்கள் (வித்துவான் சி.ஆறுமுகம், வித்துவான் பொன் அ.கனகசபை, பண்டிதர் வீ.வ.நல்லதம்பி, கலாநிதி க.சிவராமலிங்கம்) ஆகிய 23 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.