13871 குலசேகரம் 1940-2018.

நினைவு மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 6: சுப்பிரமணியம் குலசேகரம் குடும்பத்தினர், இல. 7, இராமகிருஷ்ணா டெரஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்புஇ 2018. (கொழும்பு: சச்சின் அட்வர்டைசிங் அன்ட் பிரின்டர்ஸ், 73, 1/1, மனிங் பிளேஸ், வெள்ளவத்தை).

76 பக்கம், புகைப்படங்கள்இ விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×21 சமீ.

காரைநகரைச் சேர்ந்த அமரர் சுப்பிரமணியம் குலசேகரம் (26.5.1940-13.4.2018) அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு. இவர் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார். நில அளவைத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இம்மலரில் மாண்புமிகு சோழியபுரம் தண்டிகை (சத்துரு)குலசேகர முதலியார் பரம்பரை (சி.நவரத்தினம்), Periyaparikariyar or The Great  Physician (வி.இராமகிருஷ்ணன்), ஈழத்துச் சிதம்பரம் காரைநகர் சிவன் கோவில் (காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகளிலிருந்து), பக்தி: ஈழத்துச் சிதம்பர புராணத்தில் (சிவ.மகாலிங்கம்), காயசித்தி உபாயம் (சிவமகாலிங்கம்) ஆகிய சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்