மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, ஆவணி 2017. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).
xviii, 250 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-44538-3-8.
இந்நூலில் சாதனை படைத்த 51 குலமகளிர் பற்றி ஆசிரியர் விரிவாக எழுதியுள்ளார். தெய்வ மகளிராக மதுரை மீனாட்சி, உமாதேவிஇ வள்ளிநாயகி, சீதை, ஸ்ரீ ஆண்டாள், பக்தமீரா, கண்ணகி ஆகியோரையும், தெய்வீக அருளாளர்களாக காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசி, திலகவதியார், அன்னை சாரதாதேவி, மணிமேகலை, வந்தி, தாடகைப் பிராட்டியார், தருமசீலை, திருவெண்காட்டு நங்கை, இணுவில் சாத்திரம்மா, தஞ்சை மூதாட்டி ஆகியோரையும், தமிழ் வளர்த்த பெண்களாக ஒளவை மூதாட்டி, சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, பண்டிதை பத்மாசனி, திருமதி ஆயிலியம், இணுவில் ஆசிரியை சிவபாக்கியம், ஆச்சி சரஸ்வதி ஆறுமுகம், ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் ஆகியோரையும், கலைச்சோலையில் பிரகாசித்த பெண்களாக மாதவி-நடனக்கலை, மாமேதை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, கொடுமுடி கோகுலம் சுந்தராம்பாள், சங்கீதரத்தினம் லட்சுமிரத்னம்மாள், பல்சுவைக் கலைவித்தகி விஜயலட்சுமி சண்முகம்பிள்ளை, நாட்டிய தாரகை ஹேமலதா மிராண்டா ஆகியோரையும், அறப்பணியால் உயர்ந்த அன்னையராக அன்னை திரேசா, கண்ணொளி அற்றோரை அகவொளி காட்டி உய்வித்த அன்னை அன்னலட்சுமிஇ இரினா சென்ட்லர் ஆகியோரையும், கற்புடை மகளிராக சாவித்திரி, கற்பின் பெருமையால் பொழுதை விடியாதிருக்கச் சபித்த நளாயினி, கற்பின் பெருமையை நிலைநாட்டிய வாசுகி, பதிபக்தி விரதம்பூண்ட சந்திரமதி, தமயந்தி, சகுந்தலை, அனசூயை, அன்னை கஸ்தூரிபாய் காந்தி ஆகியோரையும்இ சின்னஞ்சிறு வயதில் சாதனை படைத்தோராக மர்ஜாஇ கலாநிதி அன்னிபெசன்ட், மரியா மொண்டிசோரி, வீரப்பெண் ஜான்சிராணிஇ இந்தியாவின் புவியரசி சரோஜினிதேவி, சிறுமி எலிசபெத்இ புளோரன்ஸ் நைட்டிங்கேள், ஒன்பது வயதில் திருக்குறள் ஓதிச் சாதனை படைத்த தீபா, திருக்குறள் குழந்தை எனப் பட்டம் பெற்ற திறமைசாலி கோமல் ஆகியோரையும் இந்நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். இறுதியாக எமது தாயக மண்ணில் பெண் கல்வியும் அருட் சகோதரிகளின் வகிபாகமும் என்ற கட்டுரையையும் இணைத்து நூலை நிறைவுசெய்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62076).