13874 மறைந்தும் மறையாதவர்கள்:பாகம் 2.

இணுவையூர் ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன். கொழும்பு 6: சுமதி பதிப்பகம், L/G/4வேலுவனராம அடுக்குமாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).

173 பக்கம்இ ரூபா 500.இ அளவு: 19.5×13 சமீ., ISBN: 978-955-43909-2-8.

2015-2018 காலகட்டத்தில் ஆசிரியர் பத்திரிகைகளுக்கு எழுதிய 54 ஆக்கங்களின் தொகுப்பு இதுவாகும். இனம், மொழி, நாட்டுப்பற்றுடன் செயற்பட்டு மறைந்தும்இ தமிழர்களின் மனதைவிட்டு மறையாத ஆளுமைகள் பற்றியதாக அனைத்துக் கட்டுரைகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆளுமை பற்றியும் மிக விரிவான தகவல்கள் இக்கட்டுரைகளில் காணப்படுகின்றன. சுவாமி சின்மயானந்தா, அன்னை ஸ்ரீ சாரதாதேவி, ஜவஹர்லால் நேரு, காமராஜர், அன்னை தெரேசா, கா.சிவத்தம்பி, இ.சிவகுருநாதன், புலவர் த.கனகரத்தினம், மு.கதிர்காமநாதன், கருணை ஆனந்தன், வீரமாமுனிவர், பாவலர் துரையப்பாபிள்ளை, புலவர் வை.க.சிற்றம்பலம்இ புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, நமசிவாயம், யோகா ஆசான் ஆறுமுகம், ‘அண்ணா’ நடராசாஇ கந்தையா உமாபதி, ஆ.தேவராசன், அருள் மா.இராசேந்திரம், நடிகர் சிவாஜிகணேசன், நடிகை பத்மினி, டி.எஸ்.பாலையா, சத்யஜித்ரே, மார்லன் பிராண்டோ, புதுமைப்பித்தன், கோமல் சுவாமிநாதன், சாரல்நாடன், கே.விஜயன், மாவை வரோதயன், கவிஞர் முருகையன், காரை.செ.சுந்தரம்பிள்ளை, இரசிகமணி கனக செந்திநாதன், இர.சிவலிங்கம், கவிஞர் நீலாவணன், பீ.எம்.புன்னியாமீன், டாக்டர் அம்பேத்கார்இ திம்பு குமாரசாமி, எல்.ஏ.மாஸ்ரர், வேலணை வேணியன், இராஜவிஜயன், சாண்டோ சின்னப்பதேவர், பாலமுரளி கிருஷ்ணா, வீணை பலசந்தர், வி.கே.குமாரசாமி, அ.சிவதாசன், மனோன்மணி சங்கரப்பிள்ளை, அ.அமிர்தலிங்கம், சிவக்கொழுந்து சிவலோகநாதன், சரவணமுத்து குமாரவேல், இராணி இராமலிங்கம், பிலோமினா லொறன்ஸ், டயானா ஆகியோரின் வாழ்வும் பணிகளும் தனித்தனிக் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் பெரும்பான்மையானவை வெளிவந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64647).

ஏனைய பதிவுகள்