13875 வரலாற்றில் தடம் பதித்தவர்கள்: பாகம் 1.

P.P.அந்தோனிப்பிள்ளை. தெகிவளை: காயத்திரி பப்ளிகேஷன், தபால்பெட்டி இல.64, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).

64 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8741-32-0.

உலக வரலாற்றில் தடம்பதித்த ஐம்பது ஆளுமைகள் பற்றி இந்நூல் சுருக்கமாகப் பதிவுசெய்கின்றது. வின்ஸ்டன் சேர்ச்சில், மகாத்மா காந்தி, அல்பேர்ட் ஈன்ஸ்டீன், அரசி விக்டோரியா, அல்பிரட் நோபல், அன்னை தெரெசா, தோமஸ் அல்வா எடிசன், சேர் சி.வி.இராமன், பி.ரி.உஷா, கார்பீல்ட் சோபெர்ஸ், டொனால்ட் பிராட்மன், தயான்சந்த், ஜெசி ஓவன்ஸ், இந்திரா காந்தி, பீலே, ஜோர்ஜ் பேர்னாட் ஷா, சுவாமி விவேகானந்தர், பிக்காஸோ, லெனின், சார்ள்ஸ் டார்வின், ஷேக்ஸ்பியர், சுபாஷ் சந்திரபோஸ், கணித மேதை இராமானுஜன், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், மார்க்கோனி, ஜோன் கூட்டன்பெர்க், மைக்கல் பாரடே, யூரி ககாரின், ஹென்றி போர்ட், சார்ளி சப்ளின், வால்ட் டிஸ்னி, சாலிம் அலி, ரவீந்திரநாத் தாகூர், அன்னை முத்துலட்சுமி, டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன், ஜோன் எப்.கென்னடி, ஸ்டீபன்சன், அகதா கிறிஸ்டி, கார்ள் மார்க்ஸ், சார்ள்ஸ் டிக்கன்ஸ், சுனில் கவாஸ்கர், மார்ட்டின் லூதர் கிங், டென்சிங் நோர்கே, சேர் ஐசாக் நியூட்டன், கலிலியோ கலிலி, ஆபிரஹாம் லிங்கன், லுயிஸ் பாஸ்டர், மகா அலெக்சாண்டர், சோக்கிரட்டீஸ், புளோரன்ஸ் நைற்றிங்கேல் ஆகியோர் பற்றிய வாழ்வும் பணியும் பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49473).

ஏனைய பதிவுகள்