13877 எஸ்போஸ்: அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றனர்.

கருணாகரன். யாழ்ப்பாணம்: மறுபாதி வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர்; (1975-2007) கவிஞராகவும், பத்திரிகையாளராகவும், இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர். கவிதைகளுடன், சிறுகதைகளையும், விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புத்தக வடிவமைப்பிலும் ஈடுபட்டு வந்தார். ஈழநாதம், வெளிச்சம், ஈழநாடு, நிலம், காலச்சுவடு, வீரகேசரி, சரிநிகர், மூன்றாவது மனிதன், தமிழ் உலகம், இன்னொரு காலடி ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வந்திருக்கின்றன. வெளிச்சம், ஈழநாதம், ஈழநாடு, வீரகேசரி ஆகிய இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார். நிலம் என்ற கவிதைக்கான இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார். லண்டனிலிருந்து வெளியிடப்பட்ட ‘தமிழ் உலகம்” என்ற இதழிற்கு ஆசிரியராக இருந்து கொழும்பில் வைத்து தயாரித்து வழங்கினார். சந்திரபோஸ் சுதாகர் என்ற தன்னுடைய பெயரிலேயே ஆரம்பத்தில் எழுதிவந்தவர் பின்னாளில், எஸ்போஸ், போஸ்நிஹாலே என்ற பெயர்களிலும் எழுதினார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திரபோஸ் சுதாகர் பளையில் 1975 இல் பிறந்தார். பிறகு வன்னியில் அக்கராயன்குளத்தில் படித்தார். தந்தை பளை முகமாலையைச் சேர்ந்தவர். தாய் நெடுந்தீவில் பிறந்தவர். தாய் அக்கராயன் பொது மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றியபடியால் அங்கேயே குடும்பத்தினர் குடியேறியிருந்தனர். எஸ்போஸ் சிங்களம் பேசிய ஆயுததாரிகளால் வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து 16-04-2007 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட சந்திரபோஸ் சுதாகரின் நினைவுப் பகிர்வு நிகழ்வு மறுபாதிக் குழுமத்தின் ஏற்பாட்டில் 16-04-2016 அன்று யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள புதிய உயர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. விமர்சகர் சி.ரமேஸ் நிகழ்வை முன்னிலைப்படுத்தினார். இவ்வேளை, எஸ்போஸ் நினைவாக கவிஞர் கருணாகரன் எழுதிய ‘அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றனர்’ எனும் இந்நூல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

ஏனைய பதிவுகள்

14086 சைவப் பிரகாசிகை: முதலாம், இரண்டாம்,மூன்றாம், நான்காம், ஐந்தாம் புத்தகங்கள்.

ச.குமாரசுவாமிக் குருக்கள். கொழும்பு 4: அறநெறிப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 529/19, கே.சிறில் சி.பெரேரா