13879 இமாம் கொமெய்னி அவர்களின் சரிதை.

ஈரானிய தூதரகம். கொழும்பு: கலாசாரப் பகுதி, ஈரான் இஸ்லாமியக் குடியரசுத் தூதரகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 2: கிரஸ்ஸன்ட் பப்ளிக்கேஷன்ஸ், 90, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை).

(2), 22 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

இமாம் கொமெய்னி ஓர் ஈரானிய அறிஞரும், இசீயா முஸ்லிம் மதத் தலைவரும், மெய்யியலாளரும், புரட்சியாளரும், அரசியல்வாதியும், ஈரான் இசுலாமியக் குடியரசின் நிறுவனரும் ஆவார். 1979இல் இவரால் தொடங்கப்பட்ட ஈரானியப் புரட்சியை அடுத்து 2500-ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீகப் பேரரசு முடிவுக்கு வந்து ஈரானின் கடைசி அரசர் (ஷா) முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பதவி இழந்தார். புரட்சிக்கு பிறகு இறப்பு வரை இமாம் கொமெய்னி  ஈரானின் ஆன்மீக உச்சத் தலைவராக இருந்தார். 1979 டைம் ஆண்டு நபராக அமெரிக்க டைம் செய்தி இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இஸ்லாமின் மீட்கைக்கு வழிகோலியதாக சியா மற்றும் சுன்னி மக்களால் ஒருசேர மிகவும் விரும்பப்பட்ட தலைவர் எனக் கருதப்பட்டார். இந்நூல் இமாம் கொமெய்னி 1900களில் பிறந்தது முதல் அவரது வளர்ச்சியையும் பணிகளையும் சுருக்கமாக விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33725).

ஏனைய பதிவுகள்

12782 – சுதந்திரம்: தென்னாசிய மொழிபெயர்ப்புக் கவிதைகள்.

கந்தையா ஸ்ரீகணேசன். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxv, 63 பக்கம், விலை: ரூபா 250.,