13880 ஈழத்து சைவசித்தாந்த அபிவிருத்திப் பணியில் சேர்.பொன் இராமநாதன் (1930-1951).

கலைவாணி இராமநாதன். யாழ்ப்பாணம்: திருமதி. கலைவாணி இராமநாதன், இந்து நாகரிகத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (யாழ்ப்பாணம்: அகரம் கணனிப் பதிப்பகம், பிரவுண் வீதி, தொழில்நுட்பக் கல்லூரி முன்பாக).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

கலைவாணி இராமநாதன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறையின் முதுநிலை விரிவுரையாளரான இவர், பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் முதலாவது பெண் பேராசிரியர் என்ற பெருமையையும்; பெற்றுள்ளார். சைவசித்தாந்த ஒழுக்கவியல் அடிப்படைகள், சைவசித்தாந்த மெய்ப் பொருளியல், வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்தத்தில் சிறப்பாகப் பல ஆய்வுகளையும் மேற்கொண்டார். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் படிப்பிற்கான ஆய்வினையும் மேற்கொண்டவர். 21.11.2009 இல் இடம்பெற்ற சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களது நினைவுப் பேருரையாக இக்கட்டுரை வாசிக்கப்பட்டது. அறிமுகம், சேர். பொன் இராமநாதன் அவர்கட்கோர் முன்னுரை, சைவசித்தாந்தம்: ஒரு சுருக்கமான விளக்கம், சைவசித்தாந்த அபிவிருத்திப் பணியில், சைவசித்தாந்த சாதனைகளில் சரியைத் தொண்டு, சைவசித்தாந்த நோக்கில் அமைந்த கிரியைத் தொண்டு, சைவசித்தாந்த யோகசாதனையில் ஆற்றிய பணிகள், சைவசித்தாந்த ஞான சாதனையில் ஆற்றிய பணிகள், முடிவுரை ஆகிய ஒன்பது இயல்களில் இவ்வாய்வு எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  24940). 

ஏனைய பதிவுகள்

Hazard Sieciowy

Content Jakie Znajdują się Najistotniejsze Kasyna Do odwiedzenia Ruletki Sieciowy Na rzecz Zawodników Pochodzące z Nasz? Kiedy Odgrywać W całej Automaty Internetowego? Różnorodne Gatunki Maszyn

13360 இலங்கையில் மொழியுரிமைகள்: தமிழை ஓர்அரசகரும மொழியாக நடைமுறைப்படுத்தல்.

பாலசிங்கம் ஸ்கந்தகுமார். கொழும்பு 8: சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையம், இல. 3, கின்சி டெரஸ், 1வது பதிப்பு, 2008. (கொஸ்வத்தை: இம்பிரஷன்ஸ் பிறின்டேர்ஸ் நிறுவனம், 128/2, சூரியா மாவத்தை, தலங்கம). xv, 208 பக்கம்,

17309 பொருகளம்: வடமோடிக் கூத்து.

முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). தமிழ்நாடு: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், புதுச்சேரி 8, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600014: பிரின்ட் பிராசஸ்). Lvii, 364 பக்கம், விலை: