13890 ஈழத் தமிழர்கள் எமக்காக வாழ்ந்தவர்கள்.

கனக மனோகரன். கனடா M1K 2B7: கனக மனோகரன், 720, Kennedy Road, 311, Toronto, Ontario, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்).

xiii, 372 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஈழத்துத் தமிழ்த் தலைவர்களின் வாழ்வும் பணிகளும் பற்றிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலின் முதலாம் பிரிவில் தந்தை செல்வா, கு.வன்னியசிங்கம், இ.எம்.வி.நாகநாதன், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், ஆர்.என்.இராஜவரோதயம், கதிரிப்பிள்ளை துரைரத்தினம், சி.கதிரவேற்பிள்ளை, சி.மூ.இராசமாணிக்கம், வி.தர்மலிங்கம், த.இராசலிங்கம், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், திருமதி சுசில் வில்சன் (தந்தை செல்வாவின் மகளும் பேராசிரியர் ஏ.ஜே.வில்சனின் மனைவியும்), அ.அமிர்தலிங்கம் பற்றிய துணைவியார் மங்கையர்க்கரசியின் கட்டுரை ஆகிய சுவையான வரலாற்றுப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பிரிவில் நல்லைநகர் நாவலரின் ஆதரவைப்பெற்ற வெள்ளி நாவலர் முத்துக்குமாரசாமி, சேர் பொன். இராமநாதன், சேர்.பொன். அருணாசலம், இருபதாண்டு காலம் இயங்கிய இளைஞர் காங்கிரஸ், அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம், அமரர் செ.சுந்தரலிங்கம், எஸ்.தொண்டமான், மு.சிவசிதம்பரம் ஆகியோர் பற்றிய ஆக்கங்களும், மூன்றாம் பிரிவில் சங்கிலி மன்னன், சங்கிலி குமாரன், வர்ணகுலத்தான், பண்டாரவன்னியன், அமரர் ஆறுமுகநாதபிள்ளை குமாரசாமி ஆகியோர் பற்றிய ஆக்கங்களும், இறுதிப் பிரிவில் கவிஞர் வி.கந்தவனம் எழுதிய ஆசிரியர் (கனக மனோகரன்) பற்றிய அறிமுகமும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Florida Online gambling & Wagering

Articles Nj Sports betting Starts Exactly what Financial Steps Must i Explore Which have Real money Casinos? Best Real money Gambling enterprises In the usa