13901 எல்லை காக்கும் இல்லங்கள்.

தமிழவள். கிளிநொச்சி: கப்டன் வானதி வெளியீட்டகம், இல. 61, கனகபுரம், 1வது பதிப்பு, பங்குனி 2005. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், 73D, 2ம் குறுக்குத் தெரு).

xxvii, 84 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ.

தமிழீழ விடுதலைப் போரில் களப்பலியாகிய எல்லைப்படை மாவீரர்கள் 32பேரின் இல்லங்களுக்கு அவர்களின் மரணத்தின் பின்னர் விஜயம்செய்து அங்குள்ளவர்களுடன் உரையாடி அவர்களது கருத்துக்களை இந்நூலில் தமிழவள் பதிவுசெய்திருக்கிறார். புதிய சகாப்தம், விழுதுகள் மட்டுமா வேர்களும் கூட, கடலின் மடியில், நேற்றுச் சுடுவேன், கதை ஒன்று சொல் தாயே, மருமகன் அல்ல மகன், உழைப்பில் தெரிந்த ஓர்மம், கண்ணீர்த் துளிகள், நியாயமான தாலாட்டு, சுடரேற்றும் மழலைகள், தந்தையே மகளாகி, கல்லறையின் பொருளென்ன, ஊர் போகும் கனவில், சோட்டர், விடியலுக்கான காத்திருப்பு, இளைஞன் ஒருவனின் நீள்பயணம், வீரன் அறியா வித்து, அமுதூட்டிய மாவீரன், இந்துவும் அவள் இதயம் கவர்ந்தவனும், றொசான் குட்டி, அப்பா வெளிநாட்டில், விரைவாய் வேண்டும் விடுதலை, வித்தான கலைஞன், எல்லா இரவும் விடியும்,  இலக்கம் 1072, கடமை தந்த நிம்மதி, சாவது ஒருமுறை, பெற்றோர் தினத்தில் பெருமையோடு, தீபாவளியும் அவர்களும், வசந்தம் துளிர்க்கும், வீரத்தாலாட்டு, விடுதலையின் விலை என ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனித் தலைப்பிட்டு இந்நூல் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளது. ஈழத்தமிழரின் ஒரு காலத்தின் கதையை இந்த இல்லங்களுக்குள்ளேயிருந்து இந்நூலாசிரியர் வெளிக்கொண்டுவந்துள்ளார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 8216). 

ஏனைய பதிவுகள்

Hearts Regulations

Articles Play | coral online sports betting Where you can Gamble Online Spades For the money Within the 2024 Do you Gamble Spades That have