13905 சுவாமி விபுலானந்தர் உயர்கல்விக்கு ஆற்றிய பணிகள்.

ச.அம்பிகைபாகன். சுன்னாகம்: ச.அம்பிகைபாகன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

10 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பணியாற்றியவர்களுள் சுவாமி விபுலானந்தர் தனித்துவமானவர். ஆன்மீகம், சமூகம், கல்வி, இலக்கியம் எனப் பல துறைசார்ந்ததாக அவரது பணிகள் அமைந்தன. மட்டக்களப்பு காரைதீவில் சாமித்தம்பி-கண்ணம்மை தம்பதியினருக்கு மகனாக 1892 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ஆந் திகதி அன்று மயில்வாகனன் என்னும் இயற்பெயருடன் பிறந்தார். மரபுத் தமிழ் கல்வியைப் பெற்ற இவர் ஆங்கில, சமஸ்கிருத மொழிகளில் பெரும் புலமையும் லத்தீன், கிரேக்கம், சிங்களம், அரபு போன்ற மொழிகளில் அறிவும் பெற்றிருந்தார். ஆசிரியத் தொழில் ஆரம்பித்த அவரது வாழ்க்கை இலங்கைப் பல்கலைக்கழக பேராசிரியராக கடமையாற்றி நிறைவடைந்தது. விஞ்ஞானத் துறைப்பட்டதாரியான இவர் 1924 இல் இராமகிருஸ்ண மடத்தின் சுவாமி விபுலானந்தர் என்ற பட்டத்தைப் பெற்றுத் துறவு வாழ்க்கையைப் மேற்கொள்ளலானார். அண்ணாமலைப் பல்கலைக்கழக முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் முதல் பேராசிரியராகவும் விளங்கிய சுவாமி உயர்கல்விக்கு வழங்கிய பங்களிப்பினை இச்சிறு பிரசுரம் விபரிக்கின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  86778cc). 

ஏனைய பதிவுகள்

Wytyczne skrill kasyno zabawy

Content Skrill kasyno – Uprawnienie hazardowa natomiast poker Jakie będą wzory uciechy w Blackjacka? Pewną spośród najważniejszych strategii w Blackjacku wydaje się komitywa tabeli procedury