13915 எனக்காக அழவேண்டாம்(Don’t cry for me) வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு.

என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா குடும்பம், 47/3, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி வடக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

76 பக்கம், புகைப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 21.5×14.5 சமீ.

வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் சமூக மருத்துவத்துறையில் 1981-2003 காலகட்டத்தில் 22 ஆண்டுகள் விரிவுரையாளராகவும், முதுநிலை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். இதில் 18 ஆண்டுகள் துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2003இலிருந்து 2013வரையிலான போர்க்காலச் சூழலில் ஐக்கிய நாடுகள் உலக சுகாதார மையத்தின் வட மாகாணத்துக்கான களப்பணி ஆலோசகராகவும் இணைப்பாளராகவும் பணியாற்றியவர். அவரது மறைவின் 31ஆம் நாள் கிரியை நிகழ்வின் ஞாபகார்த்த மலராக இந்நூல் வெளியிடப்பட்டது. இம்மலரில் தேவாரப் பதிகங்களுடன், வைத்திய கலாநிதி நடராஜா சிவராஜா வாழ்வும் பணிகளும், சுயவிபரப்பட்டியல், நூல்விபரப்பட்டியல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்