பொன்ராசா அன்ரன் (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: தமிழர் கலை பண்பாட்டு நடுவம், Centre for Just Peace and Democracy (CJPD), Reussmatt 10, 6032 Emmen, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சென்னை 600041: மெய்யருள்/தடாகம் வெளியீட்டகம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர்).
670 பக்கம், விலை: இந்திய ரூபா 600., அளவு: 25×19 சமீ., ISBN: 978-3-9523172-6-6.
தமிழ் அரங்கியல் ஆளுமை ஏ.சீ.தாசீசியஸ் (அல்போன்ஸ் குமரன் தாசீசியஸ், 1940) அவர்களின் பவளவிழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். இம்மலரில் தாசீசியஸ் குறித்து கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது சமூக வாழ்க்கைப் பதிவுகளாக அமையும் பல்வேறு பிரமுகர்களின் குறிப்புகள், தாசீசியஸ் அவர்களின் படைப்புக்கள், நேர்காணல்கள் என்பன தொகுக்கப்பட்டுள்ளன. அறிஞர்களின் பதிவுகள் என்ற முதலாவது பிரிவில், கார்த்திகேசு சிவத்தம்பி, குழந்தை ம.சண்முகலிங்கம், சி.மௌனகுரு, பத்தண்ணா, சி.தர்மலிங்கம், நடராசா இளங்கோ, சோ.தேவராஜா, காசிநாதர் சிவபாலன், வி.கந்தவனம், ஏ.ரி.பொன்னுத்துரை, பொ.கனகசபாபதி, எஸ்.பி.யேசுரட்ணம், குறமகள், சத்தியன், நோர்வே சர்வேந்திரா, க.சிதம்பரநாதன், இரவி அருணாசலம், பி.எச்.அப்துல் ஹமீது, த.ஞானரட்ணசிங்கம், விக்கி விக்கினராஜா, ஏ.ஜி.யோகராஜா, எஸ்.கே.ராஜென், ஓவியர் மருது, ஜேர்மன் வரதர், மு.நித்தியானந்தன் ஆகியோர் வழங்கிய நினைவுரைகள் இடம்பெற்றுள்ளன. ஈழக்கூத்தன் அரங்க ஆற்றுகை அனுபவங்கள் என்ற பிரிவில் பொன்ராசா அன்ரன், களரி நாடகக் குழு, றேமன், பி.ஏ.சி.ஆனந்தராசா, பரா, தி.சச்சிதானந்தம், சித்திரா ரணசிங்க, அ.மங்கை, என்.கே.மதிஅழகன், பீட்டர் பிரஸ்லர் ஆகியோரின் அனுபவப் பகிர்வுகள் இடம்பெற்றுள்ளன. ஈழக்கூத்தன் நிகழ்வுகள் என்ற பிரிவில் நாராய் நாராய் நாடகப் பயணம் (வீ.அரசு), நாராய் நாராய் நாடகப் பயண ஆவணம், நாராய் நாராய் பதிவு (சி.அண்ணாமலை), கனடாவில் இயல்விருதும் பாராட்டு விழாவும் (குரு.அரவிந்தன்) ஆகிய நிகழ்வுப் பதிகைகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து, ஈழக்கூத்தன் நேர்காணல்கள், ஈழக்கூத்தன்-பேச்சுக்கள்-எழுத்துக்கள், ஈழக்கூத்தன் பாடல்கள், ஈழக்கூத்தன் நாடகப் பனுவல்கள் (ஏன்ஓடுகிறாய்?, ஒரு கவளம் சோறு, பஞ்சவடிக் காவலன், காணி நிலம் வேண்டும், பொறுத்தது போதும், சிறி சலாமி, பிணந்தின்னும் சாத்திரங்கள், நாமார்க்கும் குடியல்லோம், அவன் செயல்) என்பவை தனித்தனிப் பிரிவுகளின்கீழ் தொகுத்துத்தரப்பட்டுள்ளன.