13923 இரசிகமணி நூற்றாண்டு மலர்மாலை.

மலர்க் குழு. தெல்லிப்பழை: சன்மார்க்க சபை, குரும்பசிட்டி, 1வது பதிப்பு, 2017. (சுன்னாகம்: மகிந்தன் கணனி அச்சகம்).

vi, 75 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனியிடம் பெற்ற பெருமைக்குரியவர் இரசிகமணி கனக.செந்திநாதன் (05.11.1916-16.11.1977). குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் நாற்பதாண்டுகள் வரை உறுப்பினராகவும், கால் நூற்றாண்டுக்கு மேலாக உபதலைவராகவும் பணியாற்றியிருந்தார். அவரது மலர்வின் 101ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்நூல் அவரது சில கட்டுரைகளையும், நினைவுரைகளையும், வாழ்த்துரைகளையும் உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது.  இரசிகமணி நினைவுகள், ஈழத்துக் குழந்தைப் பாடல்கள் ஒரு சொற்பொழிவு, இரசிகமணி சிந்தனைத் துளிகள், சிறுவர் கவிநயம் சிறுவர் பாடல்கள் ஆகிய நான்கு பிரிவுகளில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17419 திரைக்கு வராத சங்கதி.

சூரன் ஏ.ரவிவர்மா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 84 பக்கம், விலை: ரூபா