13925 என் வழி தனிவழி அல்ல.

வி.ரி.இளங்கோவன். மதுரை 625018: தழல் பதிப்பகம், FF-3, A-பிளாக், R.S.L. கோல்டன் அபார்ட்மென்ட்ஸ், திண்டுக்கல் பிரதான சாலை, விளாங்குடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (மதுரை 625 002: மதுரை ஆர்ட்ஸ் அன்ட் ஸ்கிரீன்ஸ், செல்லூர்).

92 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 110., அளவு: 21×14 சமீ.

பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துத் தமிழ் இலக்கியவாதியான வி.ரி.இளங்கோவன் அவர்களின் எழுத்துப்பணியின் ஐம்பது ஆண்டு நிறைவையிட்டு அவரது பணிகள் குறித்த கட்டுரைகள், நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. என்வழி தனிவழி அல்ல (‘நடு’ இணையத்துக்காக கோமகன் என்பவருக்கு வழங்கிய நேர்காணல்), கலை இலக்கிய வித்தகர் கலாபூஷணம் வி.ரி.இளங்கோவன் (ஞானம் இதழுக்காக அதன் ஆசிரியர் தி.ஞானசேகரன் அவர்களுக்கு ஒப்டோபர் 2015, ஞானம் இதழ் 185இற்கு வழங்கிய நேர்காணல்), பிரான்ஸ் எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனுடன் ஓர் சந்திப்பு (சங்கரன் கோயில் அருணகிரி, சங்கொலி இதழுக்காக 1.5.2012இல் பெற்றுக்கொண்ட நேர்காணல்), தோழமையைப் பெருமைப்படுத்தும் இளங்கோவன் (நாமக்கல்- கு.சின்னப்பபாரதி, எழுத்தாளர் அவர்கள் எழுதிய கட்டுரை), மக்களோடு எவர் நிற்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான எழுத்தாளர்கள் (தினக்குரல் 03.04.2011 இதழுக்காக கார்த்திகாயினி சுபேஷ் அவர்களுக்கு வழங்கிய நேர்காணல்), ஆக்க இலக்கியத்திலும் தமிழர் மருத்துவத்திலும் ஈடுபட்டுழைக்கும் இலக்கியத் தோழன் இளங்கோவன் (தேனீ இணையத்திற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து எழுத்தாளர் லெ.முருகபூபதி எழுதிய கட்டுரை), பாராட்டுக்குரிய பணியாளர் இளங்கோவன் (கலாநிதி பண்டிதர் செ.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய கட்டுரை) ஆகிய ஏழு ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்