தனபாக்கியம் குணபாலசிங்கம் (மூலம்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2016. (சென்னை 94: ஆதிலட்சுமி கிராஃபிக்ஸ்).
viii, 208 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 125.00, அளவு: 21×14 சமீ.
பதினேழு இயல்களில் எழுதப்பட்ட நூலாசிரியரின் அரைநூற்றாண்டு வாழ்க்கை அனுபவங்கள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இப்பூமியில் நான் பிறந்த நாள்முதல், இல்லற வாழ்வில் காலடி வைத்தல், குழந்தை வளர்ப்புப் பணியில், உரிமைக் குரலை என் பேனாக்கள் பேசலாயின, என் எழுத்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தோரை நினைவுகூர்கிறேன், மீண்டும் கொலைக்களங்கள், மாலைதீவு தந்த அனுபவங்கள், லண்டன் நோக்கிய புலம்பெயர்வுகள், குடும்ப வாழ்க்கை மீண்டும் ஆரம்பமாகல், மீண்டும் எழுத்துப் பணிகள் தீவிரமடைந்தன, ஈழமக்கள் இழந்த உரிமைகளுக்காக குரல்கொடுப்போருக்கு நன்றிகூறி எழுதிய கடிதங்கள், சமயங்கள் பற்றிய என் பார்வை, ஈழத்தமிழர்கள் தம் பூர்வீக மண் உரிமைகளை இழந்து அடிமையாகிய வரலாறுகளை உலகத் தலைவர்களுக்கு அறிவுறுத்தி நீதிகோரி எழுதிய கடிதங்களும் பதில்களும், 20ஆம் 21ஆம் நூற்றாண்டுகள் எமக்கு நன்கொடையாக அளித்துள்ள மாமனிதர்கள் பற்றிய நினைவுகள், மாவீரன் பிரபாகரன் நினைவேந்தல், என் எழுத்துப் பணிக்கு உதவிய உறவினருக்கு நன்றிகள், என் எழுதுகோல்களுக்கும் படப்பிடிப்புக் கருவிக்கும் நன்றி கூறுவேன் ஆகிய 17 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62447).