13938 தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி நினைவுமலர்.

மலர்க் குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).

92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

21.11.2008 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அமரர் இ.க.கந்தசுவாமி அவர்களின் நினைவுப்பரவலும், அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்ற   வேளையில் வெளியிடப்பெற்ற நினைவு மலர். இணுவில் தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், தமிழ்ச் சங்கப் பணிகள், கப்பித்தாவத்தை ஸ்ரீபால செல்வ விநாயகர் தேவஸ்தான பிரதம குருவின் அனுதாபச் செய்தி, தமிழவேளுடன் சில சந்திப்புகள், தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி திருக்குறள் மாநாட்டில் ஆற்றிய உரை, தமிழவேள் ஐயா எங்கு சென்றுவிட்டீர்கள் இனி தமிழ் காக்க யார் வருவார் (தம்பு சிவகப்பிரமணியம்), தமிழ் முனிவர் (சபா ஜெயராசா), கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அனுதாபம் (ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி), கொழும்பு தமிழ்ச்சங்கத்துக்கு காலத்தால் அழியாத சேவைகள் ஆற்றிய தமிழவேள் (செல்வத்தம்பி மாணிக்கவாசகர்),  பிரார்த்தனையுரை (ஆறு.திருமுருகன்), இணுவில் மத்திய கல்லூரி அதிபர் (அ.சதானந்தன்), இணுவில் கந்தசாமி இணையில் கந்தசாமி அவரே தமிழவேள் கந்தசாமி தமிழவேள் இ.க.கந்தசுவாமியின் தமிழ்பணி (மு.திருஞானசம்பந்தபிள்ளை), இணுவில் கிராமத்தின் பிதாமகர் இ.க.கந்தசுவாமி (மூ.சிவலிங்கம்), சிறந்த தமிழ் இலக்கியவாதி தமிழவேள் (இ.விக்னராஜா), கொழும்புத் தமிழ்ச்சங்க முன்னாள் செய்லாளரின் மறைவுக்கு பேராசிரியர் அ.சண்முகதாசின் இரங்கல் செய்தி, தலைநகரில் தமிழ்ச் சங்கம் வளர்த்த தமிழ் பெரியார் (ந.காசிவேந்தன்), கொஃதொண்டர் வித்தியாலயம் அனுதாபச் செய்தி (க.ஞானசேகரம்), இரண்டாந் திருமுறை தென் புலத்தே சீர் செய்ய சென்றீரே (பரமக்குட்டி ஸ்ரீஸ்கந்தராஜா), சுடரொளி வெளியீட்டுக்கழகத்தின் அனுதாபச் செய்தி தமிழ் வளர்த்த மேதையின் மறைவு (ஐ.தி.சம்பந்தன்), தமிழ்ச் சங்கத்தை கட்டிக்காத்த பெருமை தமிழவேள் க.இ.க. கந்தசுவாமிக்குரியது (குமரகுரபரன்), கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் உயர்வுக்கு உந்து சக்தியாக விளங்கியவர் தமிழவேள் கந்தசுவாமி (ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர்), தமிழுக்கும் சைவத்திற்கும் இறுதி மூச்சுவரை அளப்பரிய சேவையாற்றியவர் தமிழவேள் கந்தசுவாமி, தமிழவேளின் மறைவு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும் (செல்வி.க.தங்கேஸ்வரி), கண்ணீர் அஞ்சலி தமிழவேள் இ.க.கந்தசுவாமி, தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்களின் மறைவையொட்டி மட்டக்களப்பு புலவர்மணி நினைவுப்பணி மன்றம் அஞ்சலி, ஓம் சிவகாமிஅம்மை திருத்தாள் போற்றி சிவகாமியம்மை திருவூஞ்சல், உயர்திரு தமிழவேள் கந்தசுவாமி அவர்களின் பொய்கேட்டு மெய்யானார், அமரர் இணுவில் தமிழவேள் கந்தசுவாமி அவர்களின் மறைவு குறித்து கனடா தமிழ் மக்களும், இணுவில் திருவூர் ஒன்றியமும் செலுத்தும் கண்ணீர் அஞ்சலி, தமிழும் சைவமும் வளர்த்த தமிழவேள் இ.க.கந்தசுவாமி (ப.க.மகாதேவா), தமிழ்ச்சங்கமான தமிழவேள் கந்தசுவாமி ஐயாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி, 89 ஆண்டுகள் வாழ்ந்;து அரும்பணியாற்றிய உறுதி படைத்த தமிழுள்ளம் தமிழவேள் கந்தசுவாமி, சர்வதேச மொழியியல் வரலாற்றிலும் சமய விழிப்புணர்விலும் தமிழ் மொழியில் சங்கச் சான்றேன், சிலப்பதிகாரப் பெருவிழாத் தொடக்க நாளில் 11.10.2008 ஈழத்துப் பூதந்தேவனார் புலவர் கழகச் செயலாளர் தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்கள் நிகழ்த்திய தொடக்கவுரை, நினைவஞ்சலி அழைப்பிதழ், தமிழ் சங்கத்தைத் தாங்கிய தமிழவேள், கொழும்பு தமிழ்ச்சங்கம் அமரர் தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்களின் நினைவுப்பரவலும் அஞ்சலிக்கூட்டமும், ஆநளளயபந ழக னுச.ளு.ஆயழொயசயn ஆகிய தலைப்புகளில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மலர் வடிவமைப்பில் சி.சரவணபவன், மா.சடாட்சரன், ஹம்சகௌரி சிவஜோதி, ஜெயஸ்ரீ அசோக்குமார், து.தாரணி, க.ஹேமலதா, தெ.சத்தியசீலன், க.குமரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 004139).

ஏனைய பதிவுகள்