தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 202 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8354-87-2.
ஈழத்து இலக்கிய உலகில் சுமார் ஆறு தசாப்தகாலமாக இயங்கிவரும் எழுத்தாளர் தி.ஞானசேகரன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஊடகங்களுக்கு வழங்கிய 15 நேர்காணல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கனடா தாய்வீடு இதழுக்கு கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியத்துக்கு ஜுன் 2018இல் வழங்கியது, கனடா உதயன் பத்திரிகைக்காக எழுத்தாளர் குரு அரவிந்தன் 14.05.2018இல் பெற்றது, லண்டன் ஐ.பீ.சீ. தமிழ் ஒளிபரப்பின் ‘அகக்கண்’ நிகழ்ச்சிக்காக இளைய அப்துல்லா (எம்.என்.எம்.அனஸ்) 2.9.2017 அன்று பெற்றது, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்காக நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் 24.4.2017இல் பெற்றது, தினக்குரல் வார மஞ்சரிக்காக புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் 22.01.2017 அன்றும் 10.04.2017 அன்றும், 15.02.2015 அன்றும் பெற்றது, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்; முத்துமணி மாலை நிகழ்ச்சிக்கென கானா பிரபா 20.6.2016 அன்று பெற்றுக்கொண்டது, தமிழ் மிரர் பத்திரிகையின் இலக்கியப் பகுதிக்கு ஷாமிலா செரீப் அவர்கள் 6.4.2017 அன்று பெற்றுக்கொண்டது, லண்டன் தமிழ் கருத்துக்களம் ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களுக்கு 9.11.2015 அன்று வழங்கியது, தினக்குரல் வார மஞ்சரிக்காக கார்த்தியாயினி சுபேஷ் 10.02.2013 அன்று பெற்றுக்கொண்டது, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக மு.மயூரன், த.அகிலன் ஆகியோருக்கு ஒக்டோபர் 2010இல் வழங்கியது, தமிழகத்தின் இனிய நந்தவனம் சஞ்சிகைக்கென நந்தவனம் சந்திரசேகரன் செப்டெம்பர் 2010இல் பெற்றது, அவுஸ்திரேலியாவின் தமிழ் முழக்கம் வானொலிக்காக பேராசிரியர் ஆசி கந்தராஜா அவர்களுக்கு 15.1.2001இல் வழங்கியது, அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் வானொலிக்கு பா.பிரபாகரன் 1999 இல் பெற்றது என இந்நேர்காணல்கள் விரிவானவையாக உள்ளன.